வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளியேற விரும்பும் அரச ஊழியர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வதற்கான உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணியகத்தின் இணையத்தளத்திற்குச் சென்று தமது தகவல்களை பதிவு செய்ய முடியும் என தொழிலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணியை ஈர்க்கும் துரித நடவடிக்கை
அரச உத்தியோகத்தர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்கள் முக்கிய பங்காற்றுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் தலையீட்டுடன் நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈர்க்கும் துரித வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அரச உத்தியோகத்தர்கள் தொழில்வாய்ப்புக்காக வெளிநாடு செல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.