வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வர்த்தகர் ஒருவரை மிரட்டி பணம் கோரிய சம்பவம் தொடர்பாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு 5 வருடம் ஒத்தி வைக்கப்பட்ட இரு வருட கடூழிய சிறைத் தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 25 மில்லியன் ரூபா தொகையை அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு பிரசன்ன ரணதுங்க வர்த்தகர் ஒருவரை தொலைபேசியில் மிரட்டி அவரிடம் இருந்து 64 மில்லியன் ரூபா பணத்தை கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.