நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ச மற்றும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் மாலை இந்தச் சந்திப்பு நீதியமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசியலமைப்பின் 21ஆம் திருத்தச் சட்டத்தின் உள்ளடக்கம் குறித்து அமைச்சர் விஜேதாச அமெரிக்கத் தூதுவரிடம் விளக்கம் அளித்துள்ளார்.
வேண்டுகோள்
அத்துடன் இலங்கையானது அமெரிக்காவின் நீண்ட கால நட்பு நாடு என்று தெரிவித்துள்ள நீதியமைச்சர் விஜேதாச, தற்போதைய நெருக்கடி நிலையில் இருந்து மீள அமெரிக்கா கைகொடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீதியமைச்சின் செயலாளர் திருமதி வசந்தாதேவியும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.