கனடாவில் முன்கூட்டியே பனிக்காலம் நெருங்கியுள்ளது.
சஸ்கற்சுவானில் பனிப்பொழிவு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை இரவு தொடக்கம் புதன்கிழமை வரை கிட்டத்தட்ட 15-சென்ரி மீற்றர்கள் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
நகரின் சுற்று புறங்களில் செவ்வாய்கிழமை முதல் மின்சாரம் கண்சிமிட்டியது. செவ்வாய்கிழமை ஏற்பட்ட பலத்த பனிபொழிவினால் வீதிகள் அனைத்தும் மிக மோசமான வழுவழுப்பாக காணப்பட்டது. பனியுடன் காற்றும் வீசியுள்ளது.
சஸ்கற்சுவானில் பெரும்பாலான பகுதிகளிற்கு பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நெடு ஞ்சாலை ஹொட்லைன் அறிக்கை பிரகாரம் சகல நெடுஞ்சாலைகளும் பனிச்சேறு மூடப்பட்டு அல்லது பனிக்கட்டி அல்லது வழுக்கல் தன்மை நிறைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன சாரதிகளை பொலிசார் எச்சரித்துள்ளனர். புதன்கிழமை பூராகவும் வியாழக்கிழமையும் பனி பெய்யும் எனவும் சில பகுதிகளில் 20 முதல்30 சென்ரி மீற்றர்கள் வரையிலான பனி எதிர்பார்க்கப்படுகின்றது.