சென்னையில் பொலிஸாரின் தடையை மீறி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்திய ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் பொலிஸாரின் அனுமதி இன்றி, மே-17 இயக்கத்தினர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து, மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 300 பேர் மீது சாஸ்திரி நகர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து, மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கைது செய்யப்பட்டு சமுதாய கூடத்தில் அடைக்கப்பட்ட நிலையில், பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமுருகன் காந்தி,
மிகவும் அமைதியாக நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தடுக்க எந்த அரசுக்கும் அதிகாரம் கிடையாது என தெரிவித்துள்ளார்.