மஹிந்தவின் காலைச்சுற்றிய பாம்பு! திடீர் முடிவினால் சந்திக்கப்போகும் பாரிய பிளவுகள்
ஒரு மனிதன் அமைதியாக இருந்தாலும் அவனை இந்த சமூதாயம் இருக்க விடாது. ஏதாவது ஒரு வகையில் தூண்டி விட்டுக்கொண்டே இருக்கும். அந்த வகையில் தான் தற்போது மஹிந்த உள்ளார்.
அரசியலில் பெரிய சறுக்கலும், குடும்ப உறவுகளின் தொடர் கைதுகளிலும் சிக்கியிருக்கும் மஹிந்த, தனிக்கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும், மீண்டும் அரசியல் பயணத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் பல செய்திகள் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன.
மஹிந்த அமைதியாக இருந்தாலும் அவரைச் சுற்றியுள்ள அரசியல் சார்ந்த மற்றும் அரசியல் சாராத பலரும் அவருக்கு நன்மை செய்யும் பெயரில் பல பிரச்சாரங்களை செய்கின்றமை மக்களுக்கு ஒரு அதிருப்தியை ஏற்படுவதோடு சலிப்புத்தன்மையையும் ஏற்படுகின்றதை காணக்கூடியதாக உள்ளது.
இந்த நிலையில் கடந்த காலங்களில் மஹிந்த தலைமையிலான புதிய கட்சியும், புதிய சின்னமும், புதிய கட்சிப் பெயரும் வெளிவரும் என்ற பல செய்திகள் வெளிவந்தன. ஆனால் மஹிந்தவோ மௌனம் காக்கின்றார். பஸிலோ இதை உறுதிப்படுத்தும் விதமாக சில செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்.
மஹிந்த தலைமையிலான கட்சிக்கு ஆதரவு திரட்டுவதும், கோடிகளைக் கொட்டி படை திரட்டுவதிலும் மும்முறமாக செயற்பட்டார்.
ஆனால், பஸில் தனது தமையனுக்கு உதவி செய்கின்றாரா? அல்லது மஹிந்தவை வைத்து அரசியலை கற்கின்றாரா? என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
இதற்கான காரணம் அண்மையில் பத்தரமுல்லையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் “பதுளையிலிருந்து எனது தலைமையிலான புதிய கட்சி உதயமாகும், அரசியலில் கற்பதற்கு நிறைய இருக்கின்றது. அனைத்தையம் கற்றுத் தெளிந்துவிட்டு மீண்டும் வருவேன்” என்று சூளுரைத்திருந்தார்.
நாட்டின் ஜனாதிபதி என்ற பதவியில் அமர்ந்திருந்த மஹிந்த ராஜபக்ஸவை பதவிக்காலம் முடியும் முன்னரே தேர்தலை நடாத்தி அவரை படுகுழியில் தள்ளியது பஸில்தான் என்பது மஹிந்த உட்பட அனைவருக்குமே தெரிந்த விடயம்.
பஸிலின் மனதில் என்னதான் இருக்கின்றது என்ற கேள்வி அனைவர் மனதில் எழுந்திருப்பது சகஜமே, ஆனால் இதே கேள்விகள் கூட்டு எதிர்க்கட்சிக்கும் எழுந்திருக்கின்றதா? இதனால்தான் திடீரென அடுத்த தேர்தலில் கோத்தாவை ஜனாதிபதியாகவும், மஹிந்தவை பிரதமராகவும் ஆக்குவதற்கு தீர்மானித்துள்ளார்கள் என்ற கருத்தும் எழுந்துள்ளது.
அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இதை தெரிவித்திருந்தார்.
இன்னும் மூன்று நாட்களில் அதாவது 8ஆம் திகதி கூட்டு எதிர்க்கட்சி முன்னெடுக்க உள்ள போராட்டத்தின்போது புதிய கட்சி தொடர்பான பல தகவல்கள் வெளிவரும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மஹிந்த புதிய கட்சியை ஆரம்பிப்பதும், பஸில் அதற்கு உதவுவது போல் நாடகமாடி தனிக்கட்சி ஆரம்பிப்பதும் ஒருபுறமிருக்க, கூட்டு எதிர்க்கட்சி பஸிலை புறந்தள்ளி கோத்தாவை தலைவராக்கும் முயற்சியில் உள்ளதால் எதிர்காலத்தில் எவ்வாறான பிளவுகள் ஏற்படக்கூடும் என்பதை யூகிக்க சற்று கடினமாகவே உள்ளது என்றால் அது மிகையாகாது.
பஸிலின் கபடத்தை கண்டறிந்த கூட்டு எதிர்க்கட்சி அவரை புறந்தள்ளி விட்டதா? அல்லது மஹிந்தவின் காலைச்சுற்றும் பாம்புதான் பஸில் என்பதை இவர்கள் புரிந்து கொண்டுவிட்டார்களா? என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது.
மஹிந்தவின் கட்சி தொடர்பாக எழுந்துள்ள பல முடிச்சுகளை அவிழ்க்கும் கூட்டமாக 8ஆம் திகதி நடைபெற உள்ள போராட்டம் அமையும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.
பஸிலா? மஹிந்தவா? கோத்தாவா? இவர்கள் சார்ந்து எழும் கேள்விகளுக்கும் சர்ச்சைகளுக்கும் முடிவு எடுக்கவேண்டுமானால் மஹிந்த வாய் திறக்க வேண்டும். தன்னைப்பற்றி எழும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதே இங்கு அனைவரும் எதிர்பார்க்கின்றார்கள்.