இலங்கை மக்களுக்கு உதவுவதற்கென இந்திய மத்திய அரசாங்கத்தின் அனுமதியுடன் தமிழக அரசினால் வழங்கப்பட்ட அத்தியாவசியப்பொருட்களான அரிசி, பால்மா மற்றும் மருந்து ஆகிய நிவாரணப்பொருட்கள் ஏற்றப்பட்ட ‘டான் பின்-99’ என்ற கப்பல் கடந்த புதன்கிழமை சென்னையிலிருந்து புறப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பை வந்தடைந்தது.
கொழும்புத்துறைமுகத்தில் தரையிறக்கப்பட்ட இந்தப் பொருட்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிடம் கையளித்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் இந்தியாவினால் இந்த உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டமைக்கு நன்றி கூறும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்தியாவிடமிருந்து சுமார் 2 பில்லியன் ரூபா பெறுமதியான மருந்து, பால்மா மற்றும் அரிசி உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. இதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளை, எமக்கு ஆதரவு வழங்கியமைக்காக இந்திய மக்களுக்கும் நன்றி கூறுகின்றோம் என்று பிரதமர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
‘அத்தோடு இலங்கையிலுள்ள இந்தியத்தூதரகம் மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோரால் வழங்கப்பட்ட உதவிகளையும் நான் பாராட்டுகின்றேன்’ என்றும் அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.