ஷரபோவாவுக்கு இரக்கம் காட்டிய சர்வதேச நீதிமன்றம்
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளின் போது நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா ஊக்க மருந்து எடுத்துக் கொண்டது தெரியவந்தது.
அவர் மெல்டோனியம் என்ற தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியது சோதனையில் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவருக்கு 2 ஆண்டு தடையை சர்வதேச டென்னிஸ் சங்கம் விதித்தது. ஆனால் தனக்கு குறைந்த தண்டனை கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்தார்.
இந்நிலையில் தான் தெரியாமல் ஊக்க மருந்தை பயன்படுத்தியதாக கூறி அவர் 2 ஆண்டு தடையை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவில் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் ஷரபோவா மீதான தடை காலத்தை இரண்டு ஆண்டுகளில் இருந்து 15 மாதங்களாக குறைத்து விளையாட்டுக்கான சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.