18 ஆண்டு வரி செலுத்தாத ட்ரம்ப்?
அமெரிக்காவின் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 18 ஆண்டுகள் வரி செலுத்தாமல் தவிர்த்திருக்கக்கூடும் என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் ட்ரம்புக்கும் இடையே அண்மையில் நேரடி விவாதம் நடைபெற்றது. அப்போது ட்ரம்பின் வருமான வரி கணக்கு விவரங்களை பகிரங்கமாக வெளியிட முடியுமா என்று ஹிலாரி கேள்வி எழுப்பினார்.
ஹிலாரியின் சர்ச்சைக்குரிய இ-மெயில்களை வெளியிட்டால் நானும் வருமான வரி கணக்கு விவரங்களை பகிரங்கமாக சமர்ப்பிக்கிறேன் என்று ட்ரம்ப் மழுப்பலாக பதிலளித்தார்.
இந்நிலையில் கடந்த 18 ஆண்டுகள் அவர் வரி செலுத்தாமல் இருந்திருக்கக்கூடும் என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
கடந்த 1995-ம் ஆண்டில் ட்ரம்ப் தாக்கல் செய்த வருமான கணக்கின்போது ரூ.6097 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த இழப்பு மிகப்பெரியது என்பதால் அமெரிக்க சட்ட விதிகளின்படி 18 ஆண்டுகள் அவர் வரி செலுத்தாமல் தவிர்த்திருக்கக்கூடும் என்று அந்த நாளிதழ் சுட்டிக் காட்டியுள்ளது.
Keywords: டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க அதிபர் வேட்பாளர், யு.எச். வரி, குடியரசுக் கட்சி வேட்பாளர், நியூயார்க் டைம்ஸ்
– See more at: http://www.canadamirror.com/canada/70994.html#sthash.mrzfC0mm.dpuf