அனைத்து தொழில் வல்லுநர்களும் தற்போது தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித் துள்ளார்.
இந்த வேலை நிறுத்தத்தால் அத்தியாவசிய சேவைகளும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை அனைத்துக் கடமை களிலிருந்தும் விலகத் தீர்மானித்துள்ளனர்.
நேற்று (09) அலரிமாளிகையில் ஒன்றுகூடிய ஒரு குழுவினர் காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தொழிற்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போதுள்ள மாவட்ட மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக்களை ஏற்றுக் கொள்வதில்லை எனவும், எந்தவொரு அரசியல்வாதியும் கலந்துகொள்ளும் கூட்டங்களில் கலந்து கொள்வதைத் தவிர்க்கவும் தீர்மானித்துள்ளனர்.
காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கமும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.