வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு தற்போதைய நிலையில் கையிருப்பில் இல்லையெனத் தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனத்தின் தலைவர், பொதுமக்களை வரிசைகளில் நிற்க வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
வீட்டுப்பாவனைக்கு விநியோகிப்பதற்கு தேவையான சமையல் எரிவாயு கையிருப்பில் இல்லை .
நேற்றைய தினம் விடுமுறை என்ற போதிலும் முத்துராஜவல லிட்ரோ எரிவாயு முனையத்திலிருந்து கணிசமான எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அத்தியாவசிய சேவைக்காக மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்படும்.
குறிப்பாக தொழிற்சாலை உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டர்களே இவ்வாறு விநியோகிக்கப்படும்.
இதேவேளை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் 3,500 மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய நிலையில் இரு கப்பல்கள் நாட்டுக்கு வரவுள்ள நிலையில், அவற்றை கொள்வனவு செய்வதற்கு இன்று 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட உள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில், கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு கோரி நேற்றிரவு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.