ராஜகிரிய மேம்பாலத்தில் போராட்டகாரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் உருவங்களை ஓவியங்களாக வரைந்துள்ளனர்.
போராட்டகாரர்கள் இந்த ஓவியங்களை வரையும் போது பொலிஸார் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
எனினும் ஆரம்பத்தில் ஓவியம் வரைந்த போது ஜனாதிபதி அதனை பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார் எனவும் தற்போது ஓவியம் வரையும் போது எந்த அடிப்படையில் எதிர்க்கின்றீர்கள் என போராட்டகாரர்கள், பொலிஸாரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் பிரதமரை விமர்சிக்கும் வகையில் போராட்டகாரர்கள் கேலிச் சித்திரைங்களை போல் இந்த ஓயவியங்களை வரைந்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர், இளைஞர், யுவதிகள் வீதிகளில் உள்ள சுவர்களில் அழகான ஓவியங்களை வரைந்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர். இதனை ஜனாதிபதி உட்பட ஆளும் கட்சியினர் பெருமிதமாக பேசியதுடன் இளைஞர்களை பாராட்டினர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]