இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவி தனக்கு வழங்கப்படுமாயின் நாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மை பலத்தை தன்னால் நிரூபிக்க முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச, மீண்டும் ஒரு முறை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள கூறுகின்றன.
இதற்கு முன்னர், தனக்கு இதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு பசில் ராஜபக்ச, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்ததுடன் அதற்கு பதில் கிடைக்கவில்லை.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பிரதி சபாநாயகர் பதவி தொடர்பான வாக்கெடுப்பின் போது பொதுஜன பெரமுன மற்றும் சுயாதீனமாக இயங்குவதாக அறிவித்த அணினர் இணைந்து வாக்களித்தனர்.
ஆளும் தரப்பின் சார்பில் பிரதி சபாநாயகர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்ட ரஞ்சித் சியம்பாலப்பிட்டியவுக்கு 148 வாக்குகள் கிடைத்தன.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றி முற்றாக பசில் ராஜபக்சவின் அரசியல் வெற்றியென பொதுஜன பெரமுனவின் பசில் ஆதரவாளர்களின் நிலைப்பாடாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதனடிப்படையில், சுயாதீனமாக இயங்குவதாக அறிவித்த 39 பேரை கழித்தாலும் 109 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பசில் ராஜபக்சவுக்கு வெளிக்காட்ட முடிந்துள்ளது.
அத்துடன் சுயாதீன அணியை சேர்ந்த 39 பேரில் பெரும்பாலானோரை பசில் தரப்புக்கு ஆதரவாக திருப்புவது பெரிய காரியமல்ல எனவும் பசில் ராஜபக்ச ஆதரவாளர் கருதுகின்றனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]