இலங்கையின் நாடாளுமன்றில் அலி சப்ரி, கோட்டாபய ராஜபக்சவின் சட்டத்தரணியாக செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்திடம் 50 மில்லியன் டொலர்கள் மாத்திரமே இருப்பதாக கூறும் நிதியமைச்சர் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்போகும் செயற்பாடுகள் குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் நாடாளுமன்றத்தின் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வுக்காணப்பவில்லை எனினும் இளைஞர்கள் நடத்திக்கொண்டிருக்கும் போராட்டங்கள் மூலமே நாட்டின் பிரச்சினைக்கு தீர்வைக்காணமுடியும். எனவே போராட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள், அவற்றை கைவிடாது தொடருமாறு சாணக்கியன் கேட்டுக்கொண்டார்.
இளைஞர்களின் போராடங்கள் காரணமாகவே பிரிக்கமுடியாது என்று கூறப்பட்ட ராஜபக்ச குடும்பத்துக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது.
எனவே வெற்றியை நெருங்கிக்கொண்டிருக்கும் போராட்டங்கள் தொடர்ந்து இடம்பெறவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்து விலகவேண்டும்
இல்லையேல், துனீசியா, எகிப்து மற்றும் லிபிய ஜனாதிபதிகளுக்கு ஏற்பட்ட நிலையே கோட்டாபயவுக்கும் ஏற்படும் என்றும் சாணக்கியன் குறிப்பிட்டார்.