அந்த ஒரு காரணத்துக்காகத் தான் தொடர்ந்து நடிக்கிறேன் – சரவணன் மீனாட்சி ரக்ஷிதா
சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் தமிழ் நெஞ்சங்களை கொள்ளையடித்தனர் நடிகை ரக்ஷிதா. இவருக்கு என்ற தனி ரசிகர்கள் பல பேர் உண்டு.
தனது நடிப்பாலும், முகபாவனையாலும் ரசிகர்களை கவந்தவர். இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தனது காதலை பற்றியும், தமிழ் ரசிகர்கள் பற்றியும் மனம் திறந்துள்ளார் ” பிரிவோம் சந்திப்போம் தொடரில் நடித்த போது, தினேஷ் உடன் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டோம். காதலுக்கு நம்பிக்கை அவசியம், அது இருந்தால் அந்த காதல் நிச்சயம் வெற்றி பெறும்.
மேலும் எனது தமிழ் ரசிகர்களை என்னவென்று சொல்வேன், என்னை தமிழ்நாட்டு மருமகள் என்று கூப்பிட்டு பட்டம் கொடுத்தவர்கள். தமிழ் ரசிகர்களைப் போல வேறு யாரும் இருக்க முடியாது. அவர்களையெல்லாம் என்றுமே என்னால் மறக்க முடியாது. அவர்களின் அன்பால் தான் தொடர்ந்து தமிழில் நடிக்கிறேன் என்றார்.