தெற்கில் இன்று பெரும்பான்மையின இளைஞர்கள் அரசுக்கு எதிரான போராட்டக் களத்தின் தலைமைத்துவத்தை கையில் எடுத்து பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளனர். இந்த நிலை வடக்கு கிழக்கிலும் ஏற்பட வேண்டும்.
அண்மையில் அமெரிக்கத் தூதுவர் ஐீலி சங்கிற்கும் தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் ஒரு சந்திப்பு நடைபெற்றது. இது குறித்து தமிழ் தலைவர்கள் வழங்கிய ஊடக சந்திப்பு நகைப்புக்கு இடமாக இருந்த அதேநேரத்தில் பெரும் கோபத்தை ஏற்படுத்தும் பொறுப்பின்மை கொண்டதாகவும் இருந்தது.
தமிழ் மக்களின் இன்றைய நிலை, தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு, அவர்களின் அபிலாசை மற்றும் இன்றைய நெருக்கடி நிலையில் தமிழர்கள் பெற வேண்டிய வாய்ப்புக்கள் போன்றவற்றை கலந்துரையாடியிருக்க வேண்டும்.
அதைவிடுத்து உப்புச் சப்பு இல்லாத பேச்சுடன், எல்லாம் சமூகமாக முடிந்தது என்ற பழைய பல்லவியை தமிழ் தலைவர்கள் பேசுகின்ற போது ஈழத் தமிழ் மக்களின் தலைமைத்துவத்தில் ஏற்பட வேண்டிய மாற்றம் அவசியம் எனத் தோன்றுகிறது.
தெற்கில் இன்று இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராடி தலைமையை தாங்களே வகிப்பதுபோல வடக்கு கிழக்கில் தமிழ் இளைஞர்கள் போராட்டங்களை கையில் எடுக்க ஏதுவாக தமிழ் தலைவர்கள் ஒதுங்கி வழிவிட வேண்டும் என்பதை நம் இனத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
கிருபா பிள்ளை
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]