இடைக்கால அரசாங்கம் அமைந்தாலும் தானே பிரதமர் என நாட்டின் தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இடைக்கால அரசாங்கம், பிரதமர் பதவி மற்றும் காலிமுகத்திடல் போராட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. நாட்டு மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், இவ்வாறான சூழ்நிலைகள் வரும். இவற்றிலிருந்து வெளியில் வர பொறுமையுடன் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறான நிலைமைகளில் கடந்த காலங்களிலும் இருந்துள்ளன தானே என சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர்கள் சிலர் கூறுகிறார்கள் உங்களை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு என வினவப்பட்ட போது, நான் நினைக்கவில்லை பெரும்பான்மையானவர்கள் இதனை கூறுகிறார்கள் என்று. ஒரு சிலர் கூறலாம். ஆனால் பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு இதுவரை என்னிடம் யாரும் கோரவில்லை என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த தயார் எனவும், பேச்சுவார்த்தைக்கு வரவில்லை எனில் அவர்கள் போராட்டத்தை தொடரலாம் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]