உக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் உக்ரேனுக்கு இரசாயன ஆயுதங்களுக்கு எதிரான சிறப்பு உடைகள், முகக்கவசங்கள் மற்றும் ட்ரோன்களை வழங்க ஜப்பான் அரசு தீர்மானித்து இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு இராணுவம் அமைச்சகம் வெளியிட்டு உள்ள ட்விட்டர் பதிவில் இருப்பதாவது “உக்ரேன் அரசுக்கு என்பிசி சூட்டுகள் (அணு,உயிரி, இரசாயன ஆயுததாக்குதலுக்கு எதிரானவை), முகக்கவசங்கள், ட்ரோன்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தங்களது நாட்டை பாதுகாக்க உக்ரேனியர்களின் போராட்டம் தொடர்கிறது. இதன் காரணமாக ஜப்பான் இராணுவ அமைச்சகம், உக்ரைன் நாட்டுக்கு தன் அதிகபட்ச ஆதரவைத் தொடரும்” என்று கூறப்பட்டுள்ளது.
சென்ற மார்ச் மாதம் ஜப்பான் குண்டு துளைக்காத உள்ளாடைகள், தலைக்கவசங்கள், வெப்ப ஆடைகள், கூடாரங்கள், சுகாதார பொருட்கள், ஜெனரேட்டர்கள் ஆகியவற்றை உக்ரேனுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]