பங்களாதேஷ் தேசிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மொஷரப் ஹொசைன் ரூபெல் புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில், நேற்று தனது 40 ஆவது வயதில் காலமானார்.
இவர் நேற்று பிற்பகல் பங்களாதேஷின் யுனைடெட் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார். இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரூபெலுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதமலவில் மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
இருப்பினும், கடந்த ஆண்டு ஜனவரியில் அவரது மூளை கட்டியை நீக்குவதற்கு முன்பு ரூபெல் சிகிச்சையின் மூலம் குணமடைந்தார்.
ரூபெல் 2008 முதல் 2016 வரை ஐந்து ஒருநாள் போட்டிகளில் வங்கதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ரூபெல் அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, சில நாட்களுக்கு முன் அவர் வீடுதிரும்பியிருந்தார்.
இருப்பினும், நேற்று செவ்வாய்க்கிழமை அவரது உடல் நிலை மோசமடைந்ததால், யுனைடெட் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் வைத்தியர்கள் அவர் ஏற்பகவே இறந்துவிட்டதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]