அரசாங்கம் போடும் சட்டத்திற்கு நாங்கள் பயப்படமாட்டோம் தொடர்ந்து எங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை அரசாங்கத்திற்கு எதிராக போராடிக்கொண்டுதான் இருப்போம் என ஆர்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு – காலிமுகத்திடலில் தொடர்ந்து 11வது நாளாக ஆர்ப்பாட்டமானது இடம்பெற்று வருகின்ற நிலையில் ஆர்பாட்டக்காரர்களுக்கு இடையேயான ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,
“ கோட்டாபய நீ போடும் சட்டங்களுக்கு நாங்கள் பயப்படபோவதில்லை, ஊரடங்கு சட்டம் போட்டபோதிலும் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்பாட்டம் செய்தார்கள் தற்போது நீ கொழும்பு – காலிமுகத்திடலில் இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு நிறைய இராணுவத்தினரை இரக்கியுள்ளாய் மேலும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளாய் அதெற்கெள்ளாம் நாங்கள் பயப்படமாட்டோம்.
எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாங்கள் இந்த போராட்டத்தை கைவிடப்போவதில்லை மேலும் இந்த ஆர்பாட்டத்திற்கு ஆதரவாக பெருமளவான மக்கள் ஆர்ப்பாட்டக்களத்திற்கு வந்துள்ளார்கள் அவர்களுடாக மர்ம நபர்களை அனுப்பி ஆர்ப்பாட்டத்தில் குழப்பத்தினை உண்டுபடுத்த இந்த அரசாங்கம் என்னுகிறது.
மேலும் தமிழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெறும்போது ஒரு சிலர் தமிர்களுக்கு எதிராக குழப்பத்தை ஏற்படுத்திகிறார்கள் என கேள்விப்பட்டோம் மற்றும் சமூக வலைதளங்களில் காணொளிகளை பார்த்தோம்.
நாங்கள் சொல்கிறோம் தமிழர்கள் அனைவரும் கொழும்பு – காலிமுகத்திடலில் இடம்பெறும் ஆர்ப்பாட்டக்களத்திற்கு வாருங்கள் நாட்டுக்காக சேர்ந்து போராடுவோம். இப்போராட்டமானது தனி சிங்களவர்களுக்கு மட்டும் இடம்பெறும் போராட்டமல்ல, தனி தமிழர்களுக்கு மட்டும் இடம்பெறும் போராட்டமல்ல, தனி ஆங்கிலர்களுக்கு மட்டும் இடம்பெறும் போராட்டம் அல்ல. இப்போராட்டமானது இலங்கை மக்களுக்கான போராட்டம்.
அனைவரும் வாருங்கள் ஒன்றாக போராடுவோம், இப்போராட்டமானது இன, மொழி, மத வேறுபாடின்றி இடம்பெற்று வரும் போராட்டம் ஆகவே அனைவரும் ஆதரவு தாருங்கள். தமிழர்கள் உங்களுக்கு நாங்கள் பாதுகாப்பு தருவோம் என தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கோட்டாபய நேற்று ஆற்றிய உரையில் தாம் பெரிய தவறிழைத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதில் எங்களிடம் கூறியதை நீங்கள் செய்யாமல் நான் தவறிழைத்து விட்டேன் என சொல்லாதீர்கள்.
பதவியில் இருந்து வெளியேறும் விஷயத்திலும் நீங்கள் காலதாமதம் எடுப்பீர்கள் என்று சொன்னால் மீண்டும் தவறிழைத்து விட்டேன் என நீங்களே சொல்லும் அளவிற்கு இந்த விடயம் போய்விடும் ஆகவே “பதவியில் இருந்து வேகமாக போ” “அனைவரும் பதவியில் இருந்து போ” என தெரிவித்துள்ளனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]