இலங்கைக் கால்பந்தாட்ட அணியின் முன்னாள் பயிற்சியாளரும் தற்போதைய தொழில்நுட்ப இயக்குனருமான பொஸ்னியா நாட்டின் அமீர் அலெஜிக்கிற்கு டொலர்களில் சம்பளம் கொடுக்க முடியாத காரணத்தினால் அவரின் ஒப்பந்த்தை முடித்துக்கொள்வதாக இலங்கைக் கால்பந்தாட்ட சம்ளேமனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.
அமீர் அலெஜிக்கின் ஒப்பந்தக் காலம் இம்மாதத்துடன் முடிகின்ற நிலையில், நாட்டில் தற்போது டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளமையினால் அவருக்காக ஒப்பந்தமாகியிருந்த ஊதியத் தொகை இரண்டு மடங்காக செலுத்த வேண்டிய நிலையில் ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பயிற்சியாளராக அமீர் நியமிகக்ப்படும்போது 200 ரூபாவில் இருந்த டொலர் பெருமதி தற்போது 400 ரூபாவை எட்டியுள்ள நிலையில் அவ்வளவு பெரிய தொகையை மேலதிகமாக செலுத்த முடியவில்லை என்றும் ஜஸ்வர் உமர் சுட்டிக்காட்டினார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]