புதிதாக இராஜாங்க அமைச்சராகப் பொறுப்பேற்ற சுரேன் ராகவனை கட்சியின் அதனைத்து பொறுப்புக்களிலும் இருந்து நீக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அவர் வகித்த உதவிச் செயலாளர், வன்னி மாவட்ட தலைவர் மற்றும் சர்வதேச உறவுகளுக்கான செயலாளர்கள் ஆகிய பதவிகளிலும் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்புரிமையிலிருந்து அவரை நீக்குவதற்கும் தீர்மானித்துள்ளதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]