இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள உணவு நெருக்கடியை தீர்ப்பதற்கு நிவாரணத்தை பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பலமிக்க 5 நாடுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுடன் ரணில் விக்ரமசிங்க, இந்த பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளார்.
எதிர்காலத்தில் இதனை விட கடுமையான உணவு நெருக்கடியை இலங்கை எதிர்நோக்க நேரிடும் என அந்நாடுகளிடம் முன்னாள் பிரதமர் விளக்கியுள்ளார்.
இந்த பிரச்சினையில் இலங்கைக்கு எப்படி உதவுவது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக அந்நாடுகள், முன்னாள் பிரதமரிடம் கூறியுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தால், இலங்கைக்கு உதவுவது இலகுவாக இருக்கும் என இந்த 5 நாடுகளின் பிரதிநிதிகள் முன்னாள் பிரதமருக்கு அறிவித்துள்ளன.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]