உள் நாட்டு – வெளிநாட்டு மதுபான போத்தல்களை வேறுபடுத்தி அறிந்துகொள்வதற்காக ஒவ்வொரு போத்தலிலும் ‘ ஸ்டிக்கர் ‘ ஒன்று ஒட்டப்படும் நடவடிக்கையால், கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையில் 4,185 கோடி ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக கலால்வரி ஆணையாளர் எம்.ஜி. குணசிறி தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் இதே மூன்று மாத காலப்பகுதியில் 3,700 கோடி ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றதாகவும், இவ்வாறான நிலையில் தென் இந்தியாவிலிருந்து அச்சிட்டு தருவிக்கப்பட்ட சிறப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட பின்னர் வருமானத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உள்நாட்டு மதுபான போத்தல்கள் பிரிவுக்குள் போலியான மது போத்தல்களும் கடந்த காலத்தில் உள்வாங்கப்பட்டிருந்த நிலையில் கலால் வரி திணைக்கள வருமானம் குறைந்திருந்தது.
இந்நிலையிலேயே தற்போது அந்த வருமானத்தில் அதிகரிப்பு அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அங்கீகாரம் பெற்ற ஒவ்வொரு மதுபான விற்பனை நிலையம் முன் பாகவும் 4 அடி உயரமான விஷேட கூடை ஒன்றினை வைக்கும் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மதுபான கால் போத்தல் மற்றும் பியர் வெற்று ரின்களை இடுவதற்காக இவ்வாறு கூடைகள் வைக்கப்படும் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இதனூடாக சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க எதிர்ப்பார்ப்பதாக கலால் வரித் திணைக்களம் தெரிவிக்கின்றது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]