சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் மின்விநியோக தடை அமுல்படுத்தப்படமாட்டாது. எதிர்வரும் வாரம் முதல் மின்விநியோக தடை அமுல்படுத்தப்படும் காலத்தை குறைந்தப்பட்ச அளவில் மட்டுப்படுத்தப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
கடந்த ஓரிரு மாதங்களை காட்டிலும் தற்போது மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் கிடைப்பனவில் சாதகமான தன்மை காணப்படுவதால் எதிர்வரும் வாரம் முதல் மின்விநியோக தடையினை இயலுமான அளவு மட்டுப்படுத்திக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டு;ள்ளது. இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் டீசல் தொகை கிடைத்துள்ளதுடன்,கொள்வனவு செய்த எரிபொருளும் தற்போது தரையிறக்கப்பட்டுள்ளதால் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் கிடைப்பனவில் சாதகமான சூழல் நிலவுகிறது.
தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு காலத்தில் அதாவது 13,14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் மின்விநியோக தடை அமுல்படுத்தப்படமாட்டாது.அத்துடன் நாளைய தினம் காலை 8.30 மணிமுதல் மாலை 05.30 மணிவரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும்,மாலை 05.30 மணிமுதல் இரவு 10.45 மணித்தியாலங்கள் வரையான காலப்பகுதியில் 1.மணித்தியாலமும்,45 நிமிடங்களும் மின்விநியோக தடை அமுல்படுத்தப்படும்.
அத்துடன் நாளை மறுதினம் 4 மணித்தியாலங்களும்,எதிர்வரும் 16 மற்றும் 17ஆம் திகதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களும்,15 நிமிடங்களும் மின்விநியோக தடை அமுல்படுத்தப்படும் எதிர்வரும் காலப்பகுதிகளில் மின்விநியோக தடையை முழுமையாக நீக்கிக் கொள்ள எதிர்பார்த்துள்ளோம் என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]