காற்றிலிருந்து குடிநீரை பெற உதவும் அதி நவீன சாதனம்
இச் சக்கரத்தில் கடல் போன்ற நீர் நிலைகளில் உள்ள நீரானது ஆவியாகி சென்று மீண்டும் மழையாக நீர் நிலைகளை அடையும்.
இதில் ஆவியாகும் சந்தர்ப்பத்தில் வளியுடன் குறிப்பிட்ட அளவு நீர் கலகின்றது.
தற்போது இவ் வகை நீரை குடிநீராக மாற்றக்கூடிய சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
Water-Gen எனும் இஸ்ரேலை சேர்ந்த நிறுவனமே குறித்த சாதனத்தினை வடிவமைத்துள்ளது.
நீராவியை ஒடுக்குவதன் மூலம் குடி நீரை உற்பத்தி செய்யும் இந்த சாதனங்களில் மூன்று வகையானவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் ஒன்று 825 கலன் நீரை உருவாக்கவல்லதாக இருப்பதுடன் மற்றையவை முறையே 118 கலன், 4 கலன் நீரை நாள் ஒன்றிற்கு உருவாக்கவல்லன.
மேலும் ஒரு கலன் நீரை உற்பத்தி செய்வதற்கு 15 ரூபாவிற்கும் குறைவாகவே செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.