ஈடன் கார்டன் மைதானத்தில் கங்குலிக்கு நடந்த விபரீதம்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கங்குலி முன்தூக்கியில் சிக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவரான செளரவ் கங்குலி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தின் முதல் தளத்தில் உள்ள தனது அலுவலகத்துக்கு மின்தூக்கியில் சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த மின் தூக்கி இரு தளங்களுக்கு இடையே சிக்கிக் கொண்டு நின்றது. இதனால் கங்குலி உள்ளே மாட்டக் கொண்டார்.
இதனையறிந்த மைதான ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்து கங்குலியை வெளியே மீட்டனர்.
மின் இணைப்பு மாற்றப்பட்டதன் காரணமாக மின்தூக்கி பழுதானதாக கூறப்படுகிறது.
இந்த மின்தூக்கி, 1987ம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி நடந்த போது மைதானத்தில் பொருத்தப்பட்டதாகும்.
இந்த பழைய மின் தூக்கியை மாற்றிவிட்டு, புதிய நவீன மின்தூக்கியை பொருத்த திட்டம் உள்ளதாக மைதான அதிகாரிகள் கூறியுள்ளனர்.