வடகொரியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும் என்று தென் கொரியா பாதுகாப்பு துறை மந்திரி பேசியது மிகபெரிய தவறு.
வடகொரியா கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.இருந்த போதிலும் உலக நாடுகள் எதிர்ப்பை மீறி அந்நாடு ஏவுகணை சோதனைகளை நடத்தி அச்சுறுத்தி வருகிறது.
அமெரிக்கா பொருளாதார தடை விதித்த போதிலும் வடகொரியா இன்னும் அடங்கவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜ.சி.பி.எம். என்று அழைக்கப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தியது. இதனால் மற்ற நாடுகள் அதிர்ச்சிஅடைந்து உள்ளன.
இந்த நிலையில் தென் கொரியாவில் உள்ள ஏவுகணை மையத்திற்கு அந்த நாட்டின் ராணுவ மந்திரி கஊக் சென்றார். அப்போது அவர் தென்கொரியா மீது வட கொரியா தாக்குதலுக்கு திட்டம் எதுவும் வைத்து இருந்தால் அந்த நாட்டின் மீது தென்கொரியா தனது துல்லியமான தாக்குதலை நடத்தும். அதற்கான திறன் எங்களிடம் உள்ளது என தெரிவித்தார்
இதற்கு வடகொரியா கண்டனம் தெரிவித்து எச்சரிக்கையும் விடுத்து உள்ளது. அந்தநாட்டின் அதிபர் கிம் ஜாங் அன்னின் சகோதரி கிம் யோஜாங் இது குறித்து கூறியதாவது.
வடகொரியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும் என்று தென் கொரியா பாதுகாப்பு துறை மந்திரி பேசியது மிகபெரிய தவறு. எங்கள் மீது ராணுவ பலத்தை தென்கொரியா பயன்படுத்தினால் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம்.
நாங்கள் அணு ஆயுதங்கள் வைத்து இருப்பது தற்காப் புக்கு தான். ஆனால் தென் கொரியா சீண்டினால் நிச்சயமாக அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம். எதிரிகள் பேரழிவை சந்திப் பார்கள். அது அவர்களுக்கு பெரும் துயரமாக அமையும். எங்கள் படை பலத்திற்கு முன்பு தென்கொரியா ஒரு பொருட்டே இல்லை… இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]