பாலியல் குற்றங்களை விசாரணை செய்வதற்கு சிறப்பு புலனாய்வாளர்கள் குழு
இராணுவ தரப்பில் இடம்பெறும் பாலியல் குற்றங்களை விசாரணை செய்வதற்கான புலனாய்வாளர்கள் குழு ஒன்றினை கனேடிய இராணுவத்தினர் உருவாக்கியுள்ளனர்.
இராணுவ பொலிஸ் தரப்பில் பாலியல் குற்றங்களை கையாள்வதற்கு தேவையான அனுபவம் மற்றும் திறன்கள் இல்லை என்று கடந்த ஆண்டு வெளியாகிய அறிக்கையில் எடுத்துக் காட்டப்பட்டது. இந்த எடுத்துக்காட்டுக்களுக்கு பதிலளிக்கும் நடவடிக்கையாக புலனாய்வாளர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
கனடா முழுவதும் ஆறு இடங்களில் செயற்படும் வகையில் 16 பேர் கொண்ட புதிய புலனாய்வாளர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இராணுவ அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், சிறந்த விசாரணைகளை நடத்துவதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்னும் புதிய புலனாய்வு உறுப்பினர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டில் முதல் ஆறு மாதங்களிலும் சுமார் 280 பாலியல் குற்றச்சாட்டுக்களை இராணுவ பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளதுடன் 49 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவற்றுள் எத்தனை வழக்குகள் நிறைவு பெற்றுள்ளன என்பது தெரிவிக்கப்படவில்லை.