இந்தியாவில் கொரோனா தொடர்பான முக்கியமான கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்படுகிறது. இன்று முதல் கட்டுப்பாடுகளுக்கான தளர்வுகள் அமுலுக்கு வருகின்றன.
இந்தியாவில் புதிதாக கொரோனா அலைகள் ஏற்படாத நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது .
இனிவரும் காலங்களில் இந்தியா முழுவதும் கூட்டங்கள் நடத்த முடியும்.
திருமணங்களில் மக்கள் கூட கட்டுப்பாடு இல்லை. பாடசாலைகள், கல்லூரிகள் இயல்பாக இயங்க முடியும். அதாவது 2 வருடங்களுக்கு முன் இந்தியாவில் கொரோனா காரணமாக போடப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுகிறது.
அதே சமயம் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட விதிகளை மட்டும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மக்கள் முகக்கவசம் தொடர்ந்து அணிய வேண்டும்.
அதேபோல் கை கழுவுதல், சானிடைசர் பயன்படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகள் தொடரும். இருப்பினும் பல மாநிலங்களில் இந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது.
மாஹராஷ்டிராவில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்திலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தலைநகர் டெல்லியிலும் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முகக்கவசம் தளர்வு தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,225 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்னிக்கை 4,30,24,440 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை 24 மணி நேரத்தில் இந்தியாவில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]