பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதி வீட்டிற்கு போகவேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம்- மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர் தெரிவிப்பு அல்ஜசீரா
தொடர்மின்வெட்டிற்கு காரணமாக அமைந்துள்ள மோசமடைந்து வரும் பொருளாதாரநிலை குறித்து சீற்றம் அதிகரித்து வருகின்ற நிலையில் இலங்கையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் வீடு அமைந்துள்ள பகுதிக்குள் நுழைய முயன்றதை தொடர்ந்து பொலிஸார் இரவு நேர ஊரடங்கினை பிறப்பித்தனர்.
இது குறித்து ஊடகங்களிற்கு வெளியிட்ட அறிக்கையில் கொழும்பின் பல பகுதிகளில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கும் நீடிக்கும் என பொலிஸ்மா அதிபர் சிடி விக்கிரமரட்ண அறிவித்தார்.
கொழும்பின் மிரிஹானாவில் ஜனாதிபதியின் வீட்டிற்கு செல்லும் பாதையில் காணப்படுகின்ற வீதிதடைகளை உடைத்துக்கொண்டு நூற்றுக்கணக்காண ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்ல முயன்றதை தொடர்ந்து அவர்களிற்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் மோதல் வெடித்ததை தொடர்ந்தே இந்த நிலை உருவானது.
கோத்தா வீட்டிற்கு போ கோத்தா ஒரு சர்வாதிகாரி என மக்கள் கோசங்களை எழுப்பினார்கள்.
நியுஸ்வயர் முகநூலில் வெளியிட்ட வீடியோக்கள் பொலிஸாரின் பேருந்து ஒன்று எரியுண்ட நிலையில் காணப்படுவதை காண்பித்தது.
இரத்தம் தோய்ந்த முகத்துடன் நபர் ஒருவர் காணப்படுவதையும் அவரிற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் சூழ்ந்திருப்பதையும் வீடியோக்கள் காண்பித்தன.
ஜனாதிபதி அவ்வேளை வீட்டிலிருந்தாரா என்பது தெரியவரவில்லை.
போலிஸ்பேச்சாளர் ஒருவர் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இலங்கை அரசாங்கத்தை எரிபொருள் உணவு உட்பட் அத்தியாவசிய தேவைகளிற்கான இறக்குமதிக்காக செலுத்துவதற்கான பணம் இல்லாத நிலைக்கு தள்ளியுள்ள அந்நியசெலாவணி நெருக்கடி காரணமாக உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடியால் இலங்கை நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்ற வேண்டுகோள்கள் எழுந்துள்ளன.
எரிபொருள் தட்டு;ப்பாடு காரணமாக 13 மணி;;த்தியால மின்வெட்டு காணப்படுகி;ன்றது,சில அரச மருத்துவமனைகள் சத்திரகிசிச்சைகளை நிறுத்தியுள்ளன.
இலங்கை சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நாடியுள்ளதுடன் சீனா இந்தியாவிடமிருந்தும் உதவியை நாடியுள்ளது.சீனா இந்தியா ஆகிய நாடுகள் ராஜபக்ச அரசாங்கம் கோரியுள்ள கடன்களுடன் 1.5 மில்லியன் டொலர் கடனுதவியையும் வழங்கியுள்ளன.
கொழும்பின் புறநகர் பகுதிகளில்இடம்பெற்ற பல இரவுநேர ஆர்ப்பாட்டங்களின் தொடர்ச்சியாகவே நேற்றைய ஆர்ப்பாட்டங்கள் காணப்பட்டன.
நேற்றைய ஆர்ப்பாட்டங்கள் நூற்றிற்கும் மேற்பட்ட மக்கள் ராஜபக்ச வீட்டை நோக்கி மக்கள் அமைதியாக அணிவகுத்ததுடன் ஆரம்பமாகின.
நாங்கள் தாங்க முடியாத வாழ்க்கைச்செலவீனம் மின்வெட்டு எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஆர்ப்பாட்டம் செய்ய வந்தோம், என பொலிஸார் தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்னர் அல்ஜசீராவிற்கு தெரிவித்த அஜித் பெரேரா ஜனாதிபதியின் வீட்டிற்கு செல்வது என்ற தீர்மானம் தன்னெழுச்சியானது பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதி வீட்டிற்கு போகவேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம் என தெரிவித்தாh.
உள்ளுர் தொலைக்காட்சியில் ஆர்ப்பாட்டங்களை பார்த்தபின்னர் கொழும்பின் ஏனைய பகுதியிலிருந்து மிரிஹானவிற்கு வந்ததாக தெரிவித்த 21 வயது முகமட் அஸ்ரி நிலைமை மிக மோசமாக உள்ளது எங்களால் இரண்டு நேரம்; சாப்பிட முடியவில்லை, எனது வாழ்க்கையில் நிலைமை இவ்வளவு மோசமானதாக இருந்ததில்லை கோத்தா வீட்டிற்கு போகவேண்டும் என தெரிவித்தார்.
மிரிஹான ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் கொழும்பின் ஏனைய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு கண்டி வீதியை மறித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.