ஜம்மு மற்றும் காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையின் பூஜ்ஜியக் கோட்டில் கோதுமை பயிர்களின் புதிய அறுவடைக்கு விவசாயிகள் தயாரகியுள்ளனர்.
எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் சிவில் நிர்வாகத்தின் ஆதரவு இந்த விவசாயிகளுக்கு கிடைக்கப்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்பகுதியில் வேளாண்மைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் விதைகள், உழவு இயந்திரங்கள், உரங்கள் மற்றும் களைக்கொல்லிகள் போன்ற உதவிகள் உள்ளூர் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. பாரிய இயந்திரங்கள் மானிய விலையிலும் வழங்கப்பட்டது.
56.4 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகளின் கடின உழைப்பால், எல்லைப் பாதுகாப்புப் படையின் உதவியோடு கோதுமையை பயிரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]