சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கை தொடர்பாக பாராளுமன்ற விவாதம் ஒன்றை வழங்குவதற்கு தயார் என ஆளும் கட்சி பிரதமகொறட அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கை தொடர்பாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படும் எதிர்க்கட்சிகள் பல இதுதொடர்பாக பாராளுமன்ற விவாதம் ஒன்று தேவை என தெரிவித்திருந்தமை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிக்கையில்,
சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பான அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு கடந்த சில தினங்களாக ரணில் விக்ரமசிங்க உட்பட பிரதான எதிர்க்கட்சி அரசாங்கத்திடம் கோரி இருந்தன.
இந்நிலையில் சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பான அறிக்கையை நேற்று வெளியிட்டிருக்கின்றது.
அதன் பிரகாரம் குறித்த அறிக்கை தொடர்பாக பாராளுமன்ற விவாதம் ஒன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். அடுத்த பாராளுமன்ற வாரத்தில் அந்த விவாதத்தை வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றோம். அடுத்த பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கடந்த வாரம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
என்றாலும் சர்வதே தேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பாக பாராளுமன்ற விவாதம் ஒன்றை அடுத்த வாரம் நடத்துவதாக இருந்தால் அதுதொடர்பில் கலந்துரையாடி, அதற்காக நேரம் ஒதுக்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை வெளிவந்த பின்னர் அதுதொடர்பில் பாராளுமன்ற விவாதம் ஒன்று தேவை என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]