தற்போதைய பூகோள அரசியல் மாற்றச் சூழ்நிலையில் அமெரிக்காவின் கொள்கை வகுப்பாளர்களுடன் பேசி ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க பொருத்தமான பிரதிநிதியாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி. உருத்திரகுமாரன் காணப்படுகிறார்.
இலங்கையில் சில மாற்றங்கள் உருவாகி வருகின்றமைக்கு பூகோள அரசியல் மாற்றங்களும் தலையீடுகளும் தான் அடிப்படையாக இருப்பதை அரசியல் அவதானம் கொண்ட எவரும் உணர்ந்து கொள்ள முடியும்.
இந்த நிலையில், கடந்த காலத்தில் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையில் முதலீடுகளை செய்ய அமெரிக்க விரும்பியபோதும் இந்தியாவுக்கான ஆதரவுக்காக அப்போது தமிழர் தரப்பு மறுப்பு தெரிவித்தது.
தற்போது இலங்கை தீவில் சீனா காலூன்றியுள்ள நிலையில் தமிழர்களின் விடுதலைப் பிரச்சினையை தீர்க்க அமெரிக்க முழுமையான ஆதரவை வழங்கும் எனில் திருகோணமலையில் அந்நாடு முதலீடுகளை செய்ய தமிழர் தரப்பு ஆதரவை வழங்கலாம்.
இதனை குறித்து அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களுடன் பேச மிகவும் பொருத்தமானவர் வி. உருத்திரகுமாரன்.
அன்றைக்கு தமிழீழ தேசியத் தலைமக்கு நெருக்கம் கொண்டிருந்ததுடன் இன்றுவரை கொள்கை பற்றுடன் பயணிக்கும் வி. உருத்திரகுமாரனின் இக் கோரிக்கையை அமெரிக்க பிரஜை என்ற வகையில் அமெரிக்க செவிசாய்ப்பதுடன் இலங்கையும் அதனை கருத்தில் எடுக்கும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
கிருபா பிள்ளை
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]