எம்மில் சிலருக்கு மூச்சு விடும் போதும்.. திடீரென்று குனியும்போதும்… மார்பில் வலி ஏற்படும். சிலருக்கு விலா எலும்பு பகுதியில் திடீரென்று வலி ஏற்படக்கூடும்.
மேலும் வேறு சிலருக்கு ஒரு பக்கமாகவோ அல்லது வலது, இடது என இரண்டு பக்கமும் வலி ஏற்படலாம்.
இத்தகைய விலா எலும்பு வலியை குணமாக்குவதற்கான புதிய சிகிச்சைகளை மருத்துவர்கள் தற்போது பரிந்துரைக்கிறார்கள்.
விலா எலும்பு பகுதியில் எதிர்பாராமல் ஏற்படும் அடி அல்லது விபத்தின் காரணமாகவும், விலா எலும்பு பகுதியில் உள்ள குருத்தெலும்பு வீக்கமடைவதாலும், விலா எலும்பின் அடர்த்தி தன்மையில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுவதாலும் இத்தகைய வலி ஏற்படக்கூடும். மேலும் வேறு சிலருக்கு நுரையீரல் பகுதியின் மேற்பகுதி வீக்கமடைந்து விலா எலும்பு பகுதியை அழுத்துவதால் வலி உண்டாகக் கூடும்.
சிலருக்கு தசை இறுக்கம் அல்லது தசை பலவீனத்தின் காரணமாகவும் இத்தகைய வலி உண்டாகும்.
இதனை மருத்துவரிடம் காண்பித்து அவர் பரிந்துரைக்கும் எக்ஸ்ரே பரிசோதனை மற்றும் முப்பரிமான சி டி ஸ்கேன் பரிசோதனை போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதனைத் தொடர்ந்து வலி நிவாரணிகளையும், விலா எலும்பு பகுதியை சுற்றி இறுக்கமான பிரத்யேக ஆடையையும் முதற்கட்ட நிவாரண சிகிச்சையாக வழங்குவார்கள்.
இதனைத் தொடர்ந்து விலா எலும்பு பகுதியில் ஏதேனும் Hairline Fracture பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா..! என்பதை கண்டறிந்து, அதற்குரிய சிகிச்சையை வழங்குவார்கள்.
வலியை கட்டுப்படுத்த பிரத்யேக பயிற்சியுடன் ஐஸ் ஒத்தடம் சிகிச்சையையும் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.
வேறு சில காரணங்களினால் விலா எலும்புகளில் புற்றுநோய் கட்டி ஏற்பட்டிருந்தால் அதற்காக பிரத்யேக சிகிச்சையை வழங்குவர்.
டொக்டர் பாலசுப்ரமணியம்
(தொகுப்பு அனுஷா)
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]