அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத பொருளாதார நெருக்கடி நிலைமையை நாட்டு மக்கள் தற்போது எதிர்கொண்டு வருகின்றனர்.
சிறந்த எதிர்காலத்தை கருத்திற்கொண்டு நாட்டு மக்கள் அனைவரும் கட்சி பேதமின்றிய வகையில் ஒன்றுப்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டு கட்சி பேதங்களின்றிய வகையில் எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
வெண்மையான உடையினை அணிந்தே பலர் இதில் கலந்துக்கொண்டார்கள்.கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற காணி சுபீகரிப்பிற்கு எதிராக அமைதி வழி போராட்டத்தில் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க கலந்துக்கொண்டு அமைதி வழி போராட்டத்தை ஊக்கவித்தார்.
நாட்டில் வாழும் மூவின மக்கள் யுத்த காலத்தில் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள், அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டார்கள்.
தற்போதைய நிலைமையும் அவ்வாறானதொரு தேவையினை ஏற்படுத்தியுள்ளது.யுத்த காலத்தை காட்டிலும் தற்போது மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மக்கள் நாளாந்தம் வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை தற்போது தோற்றம் பெற்றுள்ளது.
நாட்டினதும்,நாட்டு மக்களினதும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்தின மக்களும் இன மத பேதங்களை துறந்து ஒன்றுபட வேண்டும் ” என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]