‘தனி சிகரெட் விற்பனை – எளிதாக பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கான தூண்டில்’ என்ற ஆய்வறிக்கை வெளியீடானது, மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தினால் நேற்று முன்தினம் கொழும்பு 05 இல் அமைந்துள்ள ஜானகி உணவகத்தில் நடாத்தப்பட்டது.
இந்த ஆய்வு பாதிக்கப்படக்கூடியவர்களிடையே தனி சிகரெட்டுகளின் போக்கு பற்றிய விரிவான தகவல்களை வழங்கப்பட்டது. இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகள் மற்றும் புகைப்பவர்களினடம் தகவல் பெறப்பட்டு இவ்வாய்வு நடாத்தப்பட்டது.
மேலும், தனி சிகரட்டுக்களின் விற்பனை அதிகரித்துள்ளது, இது சிகரட் நிறுவனம் கொவிட் பரவல் காலங்களிலும் தமது வியாபாரத்தை தக்க வைத்துக்கொள்வதற்கு எவ்வாறான தந்திரோபாயங்களை மேற்கொண்டுள்ளன என்பதை தெளிவாக விளக்குகின்றது.
பல்வேறு வகைகளில் உதாரணமாக தகவல் பரிமாற்றங்கள், புகைத்தலுக்கு தனியாக இடம் ஒதுக்கி கொடுத்தல் போனறு சில வணிக ஸ்தலங்களை இலக்கு வைத்து எளிதாக பாதிக்கக்கூடிய குழுக்களுக்கிடையிலான புகைத்தல் பாவனையை தக்கவைத்துக் கொள்வதற்காக சிகரட் நிறுவனம் முயற்சித்து வருகின்றது.
எனவே, தனி சிகரெட் விற்பனையைத் தடை செய்வதற்கான சட்டங்களை நிறுவ வேண்டியதன் அவசியத்தை இந்தப் பகுப்பாய்வு எடுத்துக்காட்டுகிறது.
எமது நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்ற வேளை, நாட்டிற்குள் எளிதாக பாதிக்கப்படக்கூடிய குழுக்கள். மக்களின் நல்ல ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஒரே நேரத்தில் புத்திசாலித்தனமாக பயன்படுத்துவதற்கும் முதலீடு செய்வதற்கும் அவர்களை வழிநடத்துவது போன்றவைகளுக்கு புகையிலை கட்டுப்பாடு மற்றும் புகையிலை நிறுத்த திட்டங்கள் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும் இவ் ஆய்வு வெளிக்கொணர்ந்துள்ளது.
இக்கொள்கைகள் சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே அமுல்படுத்தப்பட வேண்டும் என முன்மொழியப்பட்டிருந்தாலும் இலங்கை அரசாங்கம் இன்னமும் அவற்றை முறையான முறையில் செயற்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
2003 இல் குஊவுஊ (புகையிலைக் கட்டுப்பாட்டுக்கொள்கை) உடன் கையெழுத்திட்டது, ஆசிய பிராந்தியத்தில் முதல் நாடாகவும், நான்காவது நாடாகவும் இலங்கை காணப்படுகிறது. இதன் விளைவாகவே, சிகரட் பெட்டிகளில் என்பது வீதமான சுகாதார எச்சரிக்கைகளை காட்சிப்படுத்துவது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இச்சட்டத்தின் 16ஆம் இலக்கக் கொள்கை தனி சிகரட் விற்பனை தடை தொடர்பாக விளக்கமளித்துள்ளது. ஆசிய பிராந்தியத்தில் முதலாவதாக கையெழுத்திட்ட புகையிலைக் கட்டுப்பாட்டிற்கு ஆர்வமாக இலங்கை தொழிற்பட வேண்டுமெனின், தனி சிகரட் விற்பனை நிறுத்தப்பட வேண்டும், மேலும் தனி சிகரட் விற்பனையை தடை செய்வதானது பாவனையை பலவீனப்படுத்தும் பாவனையில் சரிவை ஏற்படுத்தும் எனவும் இவ் ஆய்வு தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், புகையிலைக்கட்டுப்பாட்டிற்கு எந்தவிதத்திலும் பொருத்தமற்ற வகையில் கடந்த பாதீட்டில் ஒரு வகை சிகரட்டிற்கான விலை 50 வீதத்தால் குறைக்கப்பட்டது. இலங்கை புகையிலை நிறுவனத்தின் 84 வீதமான பங்குகள் அபிவிருத்தி அடைந்த நாடுகளான பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சொந்தமானது.
எமது நாடு பொருளாதார நெருக்கடிகளில் இருக்கும் இந்த நேரத்திலும் வல்லரசு நாடுகள் எமது பணத்தை சூரையாடுவதற்கு திட்டம் வகுத்துள்ளனர் என்பது தெளிவு.
ஆகவே அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்கின்ற ரீதியில் சிகரட்டுக்களுக்கான வரியை அதிகரித்து மேலும் வருமானத்தை ஈட்டுவதற்கு தொழிற்பட வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]