சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் மகேந்திர சிங் தோனி ஒப்படைத்தார்.
இந்த தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.
ஐ.பி.எல். தொடர் ஆரம்பித்தது முதலே சென்னை அணியின் தலைவராக மகேந்திர சிங் தோனி செயற்பட்டு வந்தார்.
இந்நிலையில், மகேந்திர சிங் தோனி அணியில் இடம்பெறாத நிலையில் சுரேஷ் ரெய்னா அணித் தலைவராக செயற்பட்டார்.
மகேந்திர சிங் தோனி தலைமையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இதுவரை 4 முறை சம்பியன் பட்டங்களை வென்றுள்ளது.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 2 ஆண்டுகள் தடை முடிந்து மீண்டும் திரும்பிய போது தோனி தலைமையில் சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதேவேளை, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 2 ஆண்டுகள் தடையில் இருந்த போது தோனி புனே அணிக்கு தலைமை தாங்கினார்.
இந்நிலையில், ரவீந்திர ஜடோஜாவிடம் தலைமைப் பொறுப்பை கொடுத்துள்ள மகேந்திர சிங் தோனி இந்த தொடரில் அடுத்து வரும் போட்டிகளிலும் விளையாடுவார் என்றும் சென்னை அணி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை 220 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 4,746 ஓட்டங்களை குவித்துள்ளார். ஒருமுறை அதிகபட்சமாக 48 பந்துகளில் 84 ஓட்டங்களை குவித்தமை அதிகபட்டச ஓட்ட எண்ணிக்கையாகும்.
ஐ.பி.எல். தொடரின் மிக வெற்றிகரமான தலைவர் என்றால் அது தோனி. அவர் 2008-2021 வரை 204 போட்டிகளில் தலைமையேற்றுள்ளார். அந்த வகையில் தோனி 121 போட்டிகளை வென்று கொடுத்துள்ளதுடன் 82 போட்டிகளில் தோல்வியை பெற்றுள்ளார். ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]