பருவமிழந்த பொழுதுகளும் மீட்டிடும் ரணமாய்
ஓடியாடிய வீதிகளும் அனாதையாய் ஒளிவீச
வீதியோரமாய் நடக்கையில் வந்து வந்து போகுதென்னவோ
தோழன் தோழிகளும் புழுதிமேல் புரண்டு
சிறுபராய விழுதுகளும் ஒன்றுகூடிய
ஓரங்களும் ஓலமிடும் இப்போது…!
உச்சி வெயிலும் உறையும் பனியும்
ஊறிடுமே எம் உடம்பில்
ஒட்டிய புழுதிக்கு பஞ்சமில்லை
ஓடி ஆடிய ஒழுங்கைகளும் மிச்சமில்லை
சாப்பிட்டு விளையாடு என்ற வார்த்தைக்குள்
இல்லாத தாய்பாசமும் மெழுகாய் உருகும்
உருகும் பாசதிற்கு உணரவா முடியும்
சாப்பாடு தண்ணி இல்லாமல் ஓடியே திரிவோம் ஊரெங்கும் காலை முதல் மாலை வரை உருண்டு பிரண்டு
அடிபட்ட காயங்களுடன் அப்பா வந்திடுவார் என்ற பயத்துடனே வீடுவரை ஓடுவோம்
கிணத்தடி பத்திரமெல்லாம் தண்ணி நிரப்பி
பாத்திருப்பாள் அன்னையவள்
உறிய புழுதியும் உருண்டோடும் தாயவள் குளியலில்…
வருடங்கள் கடந்தாலும் மறந்திடா எம்
பருவமிழந்த பொழுதுகள்……
கேசுதன்