சிங்கள – தமிழ் புத்தாண்டு முடியும் வரை லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிப்பதில்லை என நிறுவனம் நேற்று (22) தீர்மானித்துள்ளது.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் சந்தையில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு எதிர்வரும் சனிக்கிழமையுடன் (26) முடிவுக்கு வரும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த வாரம் இலங்கைக்கு வந்த எரிவாயுவுக்கான பணத்தை இலங்கை மத்திய வங்கி நேற்று முன்தினம் ( 21) கையளித்துள்ளது. இது பத்து மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகும். அதன்படி 3500 மெற்றிக் தொன் எரிவாயு இறக்கும் பணி நேற்று (22) ஆரம்பமானது.
லிட்ரோ நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட மேலும் இரண்டு எரிவாயு தாங்கிகள் எதிர்வரும் வியாழன் மற்றும் சனிக்கிழமை இலங்கைக்கு வரவுள்ளன.
அதன்படி, லிட்ரோ இந்த வாரம் தினசரி 120,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிடவுள்ளது.