19 ஆண்டு கால சாதனையை முறியடித்த வீராங்கனை
இந்தியாவில் தேசிய அளவில் நடந்த சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் 19 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார் கர்நாடகாவை சேர்ந்த வீராங்கனை சலோனி தலால்.
70-வது தேசிய சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜார்கண்டின் ராஞ்சியில் நடந்து வருகிறது.
இதில் பெண்களுக்கான 200 மீற்றர் பிரஸ்ட்டிரோக் பந்தயத்தில் கர்நாடக வீராங்கனை சலோனி தலால், 2 நிமிடம் 44.37 வினாடியில் பந்தய தூரத்தை கடந்த தங்கப்பதக்கம் வென்றார்.
அத்துடன் 19 ஆண்டு கால சாதனையையும் முறியடித்துள்ளார்.
இதற்கு முன்பாக கர்நாடக வீராங்கனை சஜானி ஷெட்டி 2 நிமிடம் 46.39 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.