மெட்டா நிறுவனத்தை தீவிரவாத அமைப்பாக அறிவித்து அந்த நிறுவனம் நடத்தி வரும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மெட்டா மற்றும் பேஸ்புக் ஆகிய இரு சமூகவலைதளங்களும் தீவிரவாத செயல்களை செய்வதாக ரஷ்ய அரசு தரப்பில் அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து, அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்று பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய வலைதளங்களுக்கு தடை விதிப்பதாக வெர்ஸ்கோய் மாவட்ட நீதிமன்றம் அறிவித்தது.
அதேநேரம் மெட்டா நிறுவனம் நடத்தி வரும் வாட்ஸ்அப் வாட்ஸ்அப் செயலிக்கு தடை விதிக்கப்படவில்லை.
ரஷ்யா – உக்ரேன் போரின்போது, மெட்டா நிறுவனம் ரஷ்ய எதிர்ப்பை நோக்கி செயல்பட்டதாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]