இன்றைய திகதியில் எம்மில் பலருக்கும் பல்வேறு தருணங்களில் தலைவலி ஏற்படும்.
இதற்கு பல காரணங்கள் உண்டு. சிலருக்கு தற்காலிகமாகவும், சிலருக்கு விட்டுவிட்டும், சிலருக்கு வாரக்கணக்கில் கூட தலைவலி தொடர்ந்து நீடிக்கும்.
இந்நிலையில் சிலருக்கு தலையில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் நாணய வடிவத்தில் அதாவது வட்ட வடிவத்தில் தலைவலி ஏற்படும்.
இதனை மருத்துவத் துறையினர் நம்முளர் ஹெட்ஏக் என்றும், மூளையில் உள்ள நரம்பு பகுதிகளில் ஏற்படும் அழற்சி காரணமாக உண்டாகும் தலைவலி என்றும் குறிப்பிடுகிறார்கள்.
இத்தகைய தலைவலி பெரும்பாலும் உடலில் நோய் எதிர்ப்பு திறன் குறைந்தவர்களுக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம்.
மேலும் தலைவலியால் பாதிக்கப்படுபவர்களில் 23 பேரில் ஒருவருக்கு இத்தகைய தலைவலி ஏற்படக் கூடும் என்றும் அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
இதன் போது தலைப்பகுதியில் உள்ள ஏதேனும் ஒரு பகுதியில் வட்ட வடிவில் தொடர்ச்சியாகவோ அல்லது விட்டுவிட்டோ தலைவலி உண்டாகும். 2 செ.மீ. முதல் ஆறு செ.மீ. விட்ட அளவிற்கு இத்தகைய தலைவலி ஏற்படும். பெரும்பாலும் இத்தகைய தலைவலி சில நிமிடங்கள் நீடிக்கும்.
சிலருக்கு இவை மணிக்கணக்கில் நீடிப்பதுடன், ஒரு மாதம் வரை கூட தொடர்ச்சியாக ஏற்படக்கூடும்.
வலி நிவாரணிகள் மூலம் இதற்கு உடனடியாக நிவாரணத்தை பெறலாம். சிலருக்கு சற்று வீரியம் நிறைந்த மாத்திரைகள் மூலம் இதற்கு நிவாரணம் பெறலாம்.
சிலருக்கு மருத்துவர்கள் பல்வேறு கட்ட பரிசோதனைக்குப் பிறகு போடெக்ஸ் எனப்படும் பிரத்யேக ஊசியை செலுத்தி இதற்கு நிவாரணம் வழங்குவர்.
மிகச் சிலருக்கு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அறிந்து அங்குள்ள நரம்பியல் செயல்பாட்டின் சமச்சீரற்ற தன்மையை, மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர Transcutaneous Nerve Stimulation என்ற சிகிச்சையை மேற்கொண்டு முழுமையான நிவாரணத்தை வழங்குவர்.
டொக்டர் ஜாஹீர்.
(தொகுப்பு அனுஷா)
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]