சர்வதேச நாணய நிதியத்தை நாடினால் சமூக மற்றும் அரசியல் மட்டத்தில் தோற்றம் பெறும் விளைவுகளை முன்கூட்டியதாகவே எடுத்துரைத்துள்ளேன்.
பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்கவுடன் கூட்டணிமைக்க வேண்டிய தேவை பங்காளி கட்சிகளுக்கு கிடையாது என நீர் வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
என்.எம் பெரேரா மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கம் சுபீட்சமான கொள்கை திட்டத்திற்கு முரணாக செயற்படுவதால் கூட்டணிய அரசாங்கத்திற்குள் பாரிய முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதை விடுத்து அரசாங்கம் அரசியல் நெருக்கடியை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.
நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பொருளாதாரத்தை திட்டமிட்டு பாதிப்பிற்குள்ளாக்குகிறார்.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தில் இரட்டை குடியுரிமை கொண்ட நபர் அரசியலில் செல்வாக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தினோம்.
புதிய அரசியலமைப்பின் ஊடாக இரட்டை குடியுரிமை விவகாரத்திற்கு சிறந்த தீர்வு முன்வைக்கப்படும் என ஜனாதிபதி வாக்குறுதியளித்தார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி இதுவரை காலமும் நிறைவேற்றவில்லை இனியும் நிறைவேற்றுவார் என்பதில் நம்பிக்கை கிடையாது.
இரட்டை குடியுரிமையினை கொண்ட நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ அமெரிக்காவின் நோக்கத்திற்கமைய செயற்படுகிறார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதை தவிர்த்து பிறிதொரு வழி கிடையாது என்ற நிலைமையினை உருவாக்கி விட்டார்.
சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதால் ஏற்படும் ஏற்படும் சமூக மற்றும் அரசியல் மட்டத்தில் ஏற்படும் விளைவுகள் குறித்து அரசாங்கத்திடம் ஏற்கெனவே அறிவித்துள்ளேன்.
அரசாங்கம் நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொண்டால் அரசியல் ரீதியில் தீர்மானமிக்க தீர்மானத்தை முன்னெடுப்பேன்.
பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுடன் 11 பங்காளி கட்சிகள் கூட்டணியமைக்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது.
பங்காளி கட்சிகள் ஒன்றிiனைந்து அரசியல் தீர்மானத்தை முன்னெடுப்போம் என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]