ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகருக்கு அருகே உள்ள தாமஸ்டவுன் பகுதியில் வசித்து வந்த 35 வயது இலங்கைத் தமிழ் அகதியான தனேஸ்குமார் புத்திசிகாமணி உயிரிழந்திருப்பதாக தமிழ் ஏதிலிகள் கழகம் தெரிவித்துள்ளது.
தற்காலிக பாதுகாப்பு விசாவில் வசித்து வந்த இவர் உற்பத்தி துறையில் பணியாற்றி வந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று சூழலால் வேலையை இழந்திருக்கிறார்.
நீண்ட காலமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்த அவர், அதன் காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகி மதுப் பழக்கத்திற்கு ஆளாகியதாகக் கூறப்படுகிறது.
“தனேஸ், ஆஸ்திரேலியாவின் அகதிகள் கொள்கையினால் பாதிக்கப்பட்ட மற்றுமொரு அகதியாவார். இதை நாங்கள் மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம். அனைத்து அகதிகளுக்கு சுதந்திரம் மற்றும் குடியுரிமை கிடைக்கும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை,” என தமிழ் ஏதிலிகள் கழகம் தெரிவித்துள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]