இயக்குநரும், நடிகருமான கரு. பழனியப்பன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ கள்ளன்’ படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எழுத்தாளரான சந்திரா தங்கராஜ் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘கள்ளன்’. தமிழக மலைக்கிராமங்களில் வேட்டையாடுதலை தொழிலாக கொண்ட மக்களின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தில் கரு பழனியப்பன் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.
இவருடன் நடிகர்கள் சௌந்திரராஜா, தினேஷ் சுப்பராயன், நமோ நாராயணா, நடிகைகள் நிகிதா, மாயா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எம்.எஸ். பிரபு மற்றும் கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, கே இசையமைத்திருக்கிறார்.
எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வி. மதியழகன் தயாரித்திருக்கும் இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராக இருந்த நிலையில் படத்தின் தலைப்பு குறித்து ஒரு பிரிவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
தற்போது தீர்ப்பு படக்குழுவினருக்கு சாதகமாக வெளியானதால் வெளியீட்டு திகதியை அறிவித்திருக்கிறார்கள் அந்தவகையில் மார்ச் மாதம் 18ஆம் திகதியன்று ‘கள்ளன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
சின்னத்திரையில் சமூகத்திற்கு தேவையான பல விடயங்கள் குறித்து விவாதத்தை உண்டாக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியை இயக்குநரும், நடிகருமான கரு. பழனியப்பன் தொகுத்து வழங்குவதன் மூலம் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்திருக்கிறார்.
‘மந்திரப்புன்னகை’ படத்திற்குப் பிறகு கரு. பழனியப்பன் கதையின் நாயகனாக நடித்திருப்பதால் இப்படத்திற்கு திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]