ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கீழுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் கீழுள்ள பிரதேசங்களில் வீதி விளக்குகளை அனைத்து வைக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
மின்சாரத்தை சேமிக்கும் நோக்கில் இன்று முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை இந்த நடவடிக்கை முன்னெடுக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஆளும் கட்சியின் கீழுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், குழுத் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு விடுத்துள்ள அறிவித்தலில் பசில் இதனை தெரிவித்துள்ளார்.
போதிய மழையின்மையினால் நாட்டின் நீர் மின்சார உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. அதனை ஈடு செய்ய எரிபொருளை பயன்படுத்துவதால் பாரிய செலவு ஏற்படுகிறது.
உலக சந்தையில் எரிபொருள் விலை அசாதாரணமான வகையில் அதிகரித்து வருகிறது. நாட்டின் டொலர் கையிருப்பு மிகக் குறைவான மட்டத்திலேயே காணப்படுகின்றமையான இவை அனைத்தையும் மேலும் சிக்கலாக்கியுள்ளது.
இவ்வாறான சவாலான நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்காக காணப்படுகின்ற ஒரே வழி மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதாகும். அதனை முன்னோடியாகக் கொண்டு சமூகத்தில் அதனை நடைமுறைப்படுத்த, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பசில் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும் அமைச்சரின் இந்தக் கோரிக்கைக்கு பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுவொரு முட்டாள்தனமான செயற்பாடு என குறிப்பிட்டுள்ளனர். இரவு வேளையில் வீதி விளக்குகள் இன்மையால் விபத்துக்கள் அதிகரிப்பதுடன், சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கும் வழி வகுக்கும் என பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]