- ஐ.நா.உயர்ஸ்தானிகர் உட்பட சர்வதேச, புலம்பெயர் தரப்பிடம் எடுத்துரைத்துரைப்பு
- இலங்கையின் முன்னேற்றகரமான நடவடிக்கைளுக்கு சர்வதேசம் அங்கீகாரம்
- உயர்ஸ்தானிகரை இலங்கை வருவதற்கு அழைத்துள்ளதோடு ஐ.நா.வுடன் ஈடுபடவும் தயார்
- உள்ளக அரசியலுக்காக எதிரணியினர் ஜெனிவா விரைவுரூபவ்நிலைமைகளை புரியாத நிலையில் சில புலம்பெயர் தரப்புக்கள்
(ஆர்.ராம்)
இலங்கையர்களுக்குள் காணப்படும் பிரச்சினைகளை உள்ளகப் பொறிமுறையில் தீர்த்துக்கொள்வதற்கு சந்தர்ப்பம் அளிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் அம்மையார் உட்பட ஐ.நா.மனித உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச சமூகத்தினர், புலம்பெயர் தரப்பினர்உள்ளிட்டவர்களிடத்தில் எடுத்துரைத்துள்ளோம் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஜெனிவாவில் இருந்து வீரகேசரியிடம் தெரிவித்தார்.
அத்துடன், உள்நாட்டில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் மக்கள் ஆணை பெற்ற அரசாங்கம் முன்னெடுத்து வரும் முன்னேற்றகரமான நடவடிக்கைகளுக்கு ஐ.நா.உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட சர்வதேச தரப்பினர் அங்கீகாரம் அளித்துள்ளதோடு தொடர்ந்தும் அச்செயற்பாடுகள் இடம்பெற வேண்டும் என்றும் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில் அதில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் நீதிஅமைச்சர் ஜனாதிபதி அலி சப்ரி உள்ளிட்ட குழுவினர் ஜெனிவாவிற்கு சென்றுள்ளனர்.
குறித்த குழுவினர் அங்கு ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் உட்பட உறுப்பு நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு உப நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில், நீதி அமைச்சர் அலி சப்ரிரூபவ் ஜெனிவாவில் இருந்தவாறே வீரகேசரியிடம், தற்போது நடைபெற்று வரும் 49ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் அடைவுகள் மற்றும் முக்கிய சந்திப்புக்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் வருமாறு,
முக்கிய சந்திப்புக்கள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்ற நாம் முக்கியமான சந்திப்புக்களில் பங்கேற்றிருந்தோம்.
குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர், மிச்செல் பச்லெட் அம்மையார், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் தாரிக் அஹமட் பிரபு, பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம், அணிசேரா கூட்டமைப்பின் பிரதிநிதி, இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் பிரதிநிதி, உள்ளிட்டவர்களையும், பக்க நிகழ்வுகளின் போது புலம்பெயர் தரப்பினர் உட்பட பல்வேறு தரப்பினரையும் சந்தித்திருந்தோம்.
எடுத்து உரைக்கப்பட்ட விடயங்களும் பிரதிபலிப்பும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரைச் சந்தித்தபோது, இலங்கை அரசாங்கம், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக முன்னெடுத்துள்ள விடயங்களை எடுத்துரைத்தோம்.
உள்நாட்டில் காணப்படுகின்ற யதார்த்த நிலைமைகளை பார்வையிடுவதற்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறும் கோரியிருந்தோம். அவருடைய விஜயத்தின்போது அவர் விரும்பிய இடங்களுக்கு செல்வதற்கும், விரும்பும் தரப்பினரைப் பார்வையிடுவதற்கும் சுயாதீனமாகவும்ரூபவ் சுதந்திரமாகவும் செயற்படுவதற்கும் ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தோம்.
அதேநேரம், அவர் உள்ளிட்ட ஏனைய தரப்பினரைச் சந்தித்தபோதுரூபவ் 42ஆண்டுகளுக்குப் பின்னர் முதற்தடவையாக பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேநேரம் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தல், மனித உரிமைகளை உறுதிப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களுக்காக பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பதை எடுத்துக்கூறினோம்.
அத்துடன் பொறுப்புக்கூறல் விடயத்தில் காணப்படுகின்ற சவால்களை வெளிப்படுத்தியதோடு, உள்நாட்டில் பொறிமுறையொன்றின் ஊடாக பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை முழுமையாக களைந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளோம்.
அதன்போது, இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் செயற்பாடுகளை அங்கீகரித்த அத்தரப்பினர்ரூபவ் மேலும் முன்னேற்றகரமாக தொடர்ச்சியாக அச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
அதேநேரம், உள்நாட்டில் காணப்படுகின்ற சவால்களை அவர்களுக்கு குறிப்பிட்டதோடு, ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட தரப்பினருடன் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியான ஈடுபபாடுகளைக் கொள்வதற்கும் தயாராக இருக்கின்றது என்ற விடயத்தினையும் வெளிப்படுத்தியுள்ளோம்.
இதனைவிடவும்ரூபவ் புலம்பெயர் தரப்புக்களில் பல தமது நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்றவாறு இலங்கையின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதோடு அவர்களுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தும் புலம்பெயர் தரப்புக்களின் உறுப்பினர்கள் பலர் இலங்கைக்கு ஒருதடவை கூட வருகை தராதவர்கள் என்ற விடயத்தினையும் சுட்டிக்காட்டியுள்ளோம்.
மேலும், புலம்பெயர் தரப்புக்கள் சிலவற்றுடனும் ஏனைய உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளுனும் பேச்சுவார்த்தைகளை உப நிகழ்வுகளின்போது முன்னெடுத்தோம். குறிப்பாக புலம்பெயர் தரப்புக்களை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறும் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு எப்போதும் தயாராக இருக்கின்றோம் என்ற விடயத்தினைக் கூறினோம்.
அத்தோடு, மேற்குலநாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், மற்றும் தெற்காசிய நாடுகள் அனைத்தும் நாம் குறிப்பிட்டுக் கூறிய விடயங்களை ஏற்றுக்கொண்டதோடு, தொடர்ச்சியான ஒத்துழைப்புக்களை இலங்கைக்கு வழங்குவதாகவும் கூறியுள்ளனர்.
எதிரணியின் பிரதிநிதிகள்
இந்நிலையில் ஜெனிவாவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு உறுப்பினர்கள் வருகை தந்துள்ளனர். ஜெனிவாவில் நடைபெறும் உபநிகழ்வுகளில் யார் வேண்டுமென்றாலும் பங்கேற்கலாம். அவ்வாறிருக்கையில், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இருவரும், உள்ளக அரசியலுக்காகவே ஜெனிவாவுக்கு வந்துள்ளனர்.
அவர்கள் பிரதானப்படுத்தும் விடயமானது இலங்கை ஜனாதிபதியுடன் சம்பந்தப்பட்டதாகும். நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டதன் பின்னர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை பற்றிய கரிசனை காணப்படுமாக இருந்தால் அது தொடர்பில் ஜனாதிபதியுடன் தான் பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டும்.
கோரிக்கைகளை விடுக்க வேண்டும். மாறாகரூபவ் ஜெனிவாவில் சென்று முறையீடு செய்வதால் எவ்விதமான பயனும் இல்லை. இந்தவிடயம்அவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தும் அவர்கள் ஜெனிவா சென்றிருக்கின்றமையானது, உள்நாட்டு அரசியலில் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்காகும் என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]