கடும் மோதலுக்குப் பின்னர் உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலை ரஷ்யப் படையினர் கைப்பற்றியுள்ளதாக அந்த நகரின் மேயர் உறுதிப்படுத்தியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 10 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது, ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன.
இருதரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக உக்ரைனின் தலைநகர் கீவ், அந்நாட்டின் 2 ஆவது பெரிய நகரமான கார்கிவ் ஆகியவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அங்கு கடும் மோதல் இடம்பெற்று வருகின்றது.
அந்த நகரங்களில் உள்ள முக்கிய கட்டிடங்கள் மீது ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன. அண்மையில் கெர்சான் நகரை ரஷ்ய படைகள் முழுமையாக கைப்பற்றியன.
உக்ரைனின் முக்கிய துறைமுக நகராக மரியுபோல் உள்ளது. தெற்கில் உள்ள இந்த நகரை கைப்பற்ற ரஷ்யா இராணுவம் கடந்த சில நாட்களாக தாக்குதலை தீவிரப்படுத்தியது.
ரஷ்யா கடல் வழியாக தொடர்ந்து தாக்குதலை தொடுத்து வந்தது. மேலும் தரைப் படையும் அந்நகருக்குள் தாக்குதல் மேற்கொண்டது.
இந்த நிலையில் கடும் மோதலுக்குப் பின்னர் உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலை ரஷ்ய இராணுவம் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]