உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து அதிகரித்து வரும் மனிதாபிமான தேவைகளுக்கு பதிலளிக்க ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிலையம் அவசரகால நிதி சேகரிப்பினை தொடங்கியுள்ளனர்.
நாட்டை விட்டு வெளியேறிய மக்களுக்கும் இன்னும் உக்ரேனில் இருப்பவர்களுக்கும் உதவ 1.7 பில்லியன் டொலர்களை அவசரமாக திரட்டும் பணிகளை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
உக்ரேனில் உள்ள 12 மில்லியன் மக்களுக்கு நிவாரணம் மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் என்று ஐ.நா மதிப்பிட்டுள்ளது, அதே நேரத்தில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான உக்ரேனிய அகதிகளுக்கு அடுத்த மாதங்களில் அண்டை நாடுகளில் உதவி தேவைப்படலாம் என்று கணித்துள்ளது.
இந்த உதவித் திட்டத்தில் உணவு, குடிநீர் மற்றும் சுகாதாரம், கல்வி சேவைகளுக்கான ஆதரவு, சேதமடைந்த வீடுகளை மீண்டும் நிர்மாணிப்பதற்கான வசதி மற்றும் தங்குமிடம் உதவி ஆகியவை அடங்கும்.
இடம்பெயர்ந்த மக்களுக்கான போக்குவரத்து மற்றும் தற்காலிக தங்குமிடங்களை பராமரிப்பதிலும் அமைப்பதிலும் அதிகாரிகளுக்கு உதவுவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதேவேளை மோதல் தொடங்கியதிலிருந்து 677,000 உக்ரேனியர்கள் அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தனது நிறுவனம் பதிவுசெய்துள்ளதாக ஐ.நா. அதிகாரியொருவர் ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.
அவர்களில் 50 சதவீதமானோர் தற்போது போலந்தில் உள்ளனர்.
எல்லையில் இப்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கிலோமீட்டர் நீளமாக நீண்ட வரிசையில் தப்பிச் செல்வதற்கு காத்திருக் கொண்டிருக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]